உளுந்தூர்பேட்டை அருகே, விஷம் குடித்து பெண் தற்கொலை காரணம் என்ன? போலீசார் விசாரணை

உளுந்தூர்பேட்டை அருகே விஷம் குடித்து பெண் தற்கொலை செய்து கொண்டார். அவரது சாவுக்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
உளுந்தூர்பேட்டை அருகே, விஷம் குடித்து பெண் தற்கொலை காரணம் என்ன? போலீசார் விசாரணை
Published on

உளுந்தூர்பேட்டை,

உளுந்தூர்பேட்டை அருகே உள்ள எலவனாசூர்கோட்டை புத்தூர் பகுதியை சேர்ந்தவர் அர்ஜூனன். இவருடைய மனைவி தேவி (வயது 23). இவர்களுக்கு திருமணமாகி 3 ஆண்டுகள் ஆகிறது. குழந்தை இல்லை. இந்த நிலையில் சம்பவத்தன்று வீட்டில் தனியாக இருந்த தேவி, விஷத்தை எடுத்து குடித்து விட்டதாக தெரிகிறது. இதில் அவர் மயங்கிய நிலையில் உயிருக்கு போராடிக் கொண்டிருந்தார்.

இதை பார்த்த அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக உளுந்தூர்பேட்டை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் அவர் மேல்சிகிச்சைக்காக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பெற்று வீடு திரும்பினார்.

இந்நிலையில் வீடு திரும்பிய சிறிது நேரத்தில் அவருக்கு மீண்டும் உடல்நிலை பாதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. உடனே உறவினர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்தும் பலனின்றி தேவி பரிதாபமாக உயிரிழந்தார்.

இதுகுறித்து தேவியின் தாய் கொளஞ்சி, எலவனாசூர்கோட்டை போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப் பதிவு செய்து தேவி உடல்நிலை பாதிப்பு காரணமாக தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது அவரது சாவுக்கு வேறு ஏதேனும் காரணம் உண்டா? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com