வேடசந்தூர் அருகே, நிலத்தகராறில் விவசாயி அடித்துக்கொலை மகன்கள் உள்பட 3 பேரிடம் விசாரணை

வேடசந்தூர் அருகே நிலத்தகராறில் விவசாயி அடித்துக்கொலை செய்யப்பட்டார். இதையடுத்து அவரது மகன்கள் உள்பட 3 பேரை போலீசார் பிடித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
வேடசந்தூர் அருகே, நிலத்தகராறில் விவசாயி அடித்துக்கொலை மகன்கள் உள்பட 3 பேரிடம் விசாரணை
Published on

வேடசந்தூர் :

திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே உள்ள காக்காத்தோப்பு பிரிவை சேர்ந்தவர் ஆறுமுகம் (வயது 70). விவசாயி. இவருடைய மகன்கள் பொன்னுவேல்(45), மணிகண்டன்(27).

நேற்று பொன்னுவேலுக்கும், ஆறுமுகத்துக்கும் இடையே நிலத்தை பாகம் பிரிப்பது சம்பந்தமாக வாய்தகராறு ஏற்பட்டது. இதையடுத்து அவர்களுக்கு இடையே வாக்குவாதம் முற்றி கைகலப்பு ஏற்பட்டது. அப்போது பொன்னுவேல், அவரது மனைவி சரோஜா (40), மணிகண்டன் ஆகியோர் சேர்ந்து ஆறுமுகத்தை கட்டையால் தாக்கினர். இதில் ஆறுமுகம் தலையில் பலத்த காயம் ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.

விசாரணை

இதுகுறித்து தகவல் அறிந்ததும் வேடசந்தூர் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று ஆறுமுகத்தின் உடலை கைப்பற்றி வேடசந்தூர் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

மேலும் இது தொடர்பாக வேடசந்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து பொன்னுவேல், சரோஜா மற்றும் மணிகண்டன் ஆகியோரை பிடித்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com