விருதுநகர் அருகே, ரெயில் முன் பாய்ந்து காதல் ஜோடி தற்கொலை

விருதுநகர் அருகே காதலுக்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்ததால் காதல் ஜோடி ரெயில் முன் பாய்ந்து உயிரை மாய்த்துக்கொண்டனர்.
விருதுநகர் அருகே, ரெயில் முன் பாய்ந்து காதல் ஜோடி தற்கொலை
Published on

விருதுநகர்,

விருதுநகர் அருகேயுள்ள வில்லிபத்திரி கிராமத்தை சேர்ந்தவர் பால சுப்பிரமணியன். தொழிலாளி. இவரது மகன் சரவணன்(வயது22). இவர் விருதுநகரிலுள்ள ஒரு தனியார் கல்லூரியில் படித்து முடித்துள்ளார்.

விருதுநகர் ரோசல்பட்டியை சேர்ந்த முருகன் என்பவரது மகள் ரஞ்சிதா(22). இவரும் தனியார் கல்லூரியில்பி.எஸ்சிபடித்து முடித்துள்ளார். இந்த நிலையில் சரவணனுக்கும் ரஞ்சிதாவுக்கும்இடையே காதல் மலர்ந்துள்ளது.

ஆனால்இருவரும் வெவ்வேறு சமுதாயத்தை சேர்ந்தவர்கள் என்று கூறப்படுகிறது. இதனால் இவர்களது காதலுக்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் காதல் ஜோடி தற்கொலை செய்து கொள்ள முடிவெடுத்துள்ளனர்.

நேற்று மாலை விருதுநகர்-சாத்தூர் ரெயில்பாதை பகுதிக்கு சென்றுள்ளனர். பின்னர் அந்த வழியாக வந்த ரெயில்முன் இருவரும் பாய்ந்துள்ளனர். இதில் 2 பேரும் உடல் சிதைந்து அதே இடத்தில் இறந்து போனார்கள்.

தகவல் அறிந்து போலீசார் அங்கு சென்று 2 பேரின் உடலை பரிசோதனைக்காக விருதுநகர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார்கள். மேலும் இதுதொடர்பாக தூத்துக்குடி ரெயில்வே போலீசார் விசாரணை நடத்துகிறார்கள்.

X

Daily Thanthi
www.dailythanthi.com