புதிதாக 9 பேருக்கு தொற்று

அரியலூர் மாவட்டத்தில் புதிதாக 9 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.
புதிதாக 9 பேருக்கு தொற்று
Published on

அரியலூர்:

அரியலூர் மாவட்டத்தில் 9 பேரும், பெரம்பலூர் மாவட்டத்தில் 10 பேரும் நேற்று புதிதாக கொரோனாவினால் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனாவுக்கு ஏற்கனவே சிகிச்சை பெறுபவர்களில் பெரம்பலூர் மாவட்டத்தை சேர்ந்த 6 பேரும், அரியலூர் மாவட்டத்தை சேர்ந்த 13 பேரும் குணமாகி மருத்துவமனைகளில் இருந்து நேற்று டிஸ்சார்ஜ் ஆகி உள்ளனர். கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்த பெரம்பலூர் மாவட்டத்தை சேர்ந்த 69 வயதுடைய முதியவர் ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அரியலூர் மாவட்டத்தில் நேற்றும் கொரோனாவுக்கு யாரும் உயிரிழக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது பெரம்பலூர் மாவட்டத்தில் 78 பேரும், அரியலூர் மாவட்டத்தில் 123 பேரும் கொரோனாவுக்கு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். பெரம்பலூர் மாவட்டத்தில் 621 பேருக்கும், அரியலூர் மாவட்டத்தில் 623 பேருக்கும் கொரோனா மருத்துவ பரிசோதனை முடிவுகள் வரவேண்டியுள்ளது. அரியலூர் மாவட்டத்தில் 1,210 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com