விஷம் குடித்து புதுமாப்பிள்ளை தற்கொலை

புதுப்பேட்டை அருகே விஷம் குடித்து புதுமாப்பிள்ளை தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
விஷம் குடித்து புதுமாப்பிள்ளை தற்கொலை
Published on

புதுப்பேட்டை,

புதுப்பேட்டை அருகே சிறுவத்தூர் கிராமத்தை சேர்ந்தவர் தவமணி மகன் நாகராஜ் (வயது 22). இவருக்கு கடந்த 6 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது. இந்த நிலையில் கணவன்-மனைவி இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதாக தெரிகிறது. இதில் கோபமடைந்த அவரது மனைவி நாகராஜை பிரிந்து சென்றதாக கூறப்படுகிறது. இதனால் கடந்த சில நாட்களாக நாகராஜ் மனமுடைந்த நிலையில் காணப்பட்டார்.

இந்த நிலையில் நாகராஜ் வீட்டில் இருந்த விஷத்தை எடுத்து குடித்துவிட்டார். இதைபார்த்த அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக பண்ருட்டி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

போலீசார் விசாரணை

அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் நாகராஜ் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இது குறித்த புகாரின் பேரில் புதுப்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். திருமணமான 6 மாதத்தில் வாலிபர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com