வடமாநில தொழிலாளி சாவு

வடமாநில தொழிலாளி சாவு
வடமாநில தொழிலாளி சாவு
வடமாநில தொழிலாளி சாவு
Published on

வடவள்ளி

உத்தர பிரதேசம் மித்தின்பூரை சேர்ந்தவர் பால்ராம் யாதவ் (வயது21). இவர் வடவள்ளி நவாவூர் பிரிவில் தங்கி பெயிண்டர் வேலை பார்த்தார். சம்பவத்தன்று இவர் அங்கிருந்த டர்பைன்ட் ஆயிலை எடுத்து இதை யாரால் குடிக்க முடியும் என்று நண்பர்களிடம் சவால் விட்டார். யாரும் முன்வரவில்லை.

இதனை தொடர்ந்து அவரே அதனை குடித்து விட்டார். இதனால் மயங்கிய அவரை மீட்டு கோவை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார்.

இதுகுறித்து வடவள்ளி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com