தாம்பரம் மாநகராட்சி பகுதியில் பொதுமக்கள் உதவிக்கு கட்டணமில்லா தொலைபேசி எண்கள் அறிவிப்பு

தாம்பரம் மாநகராட்சி பகுதியில் பொதுமக்கள் உதவிக்கு கட்டணமில்லா தொலைபேசி எண்கள் அறிவிப்பு.
தாம்பரம் மாநகராட்சி பகுதியில் பொதுமக்கள் உதவிக்கு கட்டணமில்லா தொலைபேசி எண்கள் அறிவிப்பு
Published on

தாம்பரம்,

தாம்பரம் மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் வசிக்கும் பொதுமக்களுக்கு தேவைப்படும் அடிப்படை வசதிகளான குடிநீர், தெரு விளக்கு, குப்பை அகற்றுதல், கழிப்பிட வசதிகள், பாதாள சாக்கடை பணிகள் மற்றும் சாலை மேம்பாட்டு வசதிகள் ஆகிய பணிகள் குறித்து சம்பந்தப்பட்ட அலுவலர்களை எளிதில் தொடர்பு கொள்ளும் வகையில் கட்டணமில்லா தொலைபேசி எண், `வாட்ஸ்அப்' எண் மற்றும் மின்னஞ்சல் முகவரி ஆகியவற்றில் தொடர்புகொண்டு பொதுமக்கள் தங்களது தேவைகளை தெரிவிக்க தாம்பரம் மாநகராட்சி சார்பில் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

அந்த அறிவிப்பில் பொதுமக்கள் தொடர்பு கொள்ளவேண்டிய கட்டணமில்லா தொலைபேசி எண் - 1800 425 4355, மின்னஞ்சல் - tambaramcorpgrievance@gmail.com, `வாட்ஸ்அப்' எண் - 8438353355 உள்ளிட்டவை வெளியிடப்பட்டுள்ளது.

X

Daily Thanthi
www.dailythanthi.com