நர்சிங் மாணவி தற்கொலை

செங்கோட்டை அருகே நர்சிங் மாணவி தற்கொலை செய்து கொண்டார்.
நர்சிங் மாணவி தற்கொலை
Published on

செங்கோட்டை:

தென்காசி மாவட்டம் செங்கோட்டை அருகே வல்லம் மெயின் ரோடு பகுதியைச் சேர்ந்தவர் முத்துகுமார். இவருடைய மகள் பவித்ரா (வயது 22). இவர் தனியார் நர்சிங் கல்லூரியில் 3&ம் ஆண்டு படித்து வந்தார். இவர் நேற்று முன்தினம் இரவில் தனது வீட்டில் அனைவரும் தூங்கிய பின்னர் திடீரென்று தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். நேற்று அதிகாலையில் கண் விழித்து பார்த்த பெற்றோர் தங்களுடைய மகள் தூக்கில் பிணமாக தொங்கியதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்து அலறினர்.

இதுகுறித்து தகவல் அறிந்ததும், செங்கோட்டை போலீசார் விரைந்து சென்று, பவித்ராவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக செங்கோட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீஸ் இன்ஸ்பெக்டர் ஷியாம்சுந்தர் வழக்குப்பதிவு செய்தார். மாணவி பவித்ரா எதற்காக தற்கொலை செய்து கொண்டார்? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகிறார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com