பாளையங்கோட்டை யூனியன் அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகை சீராக குடிநீர் வழங்க கோரிக்கை

சீராக குடிநீர் வழங்க கோரி பாளையங்கோட்டை யூனியன் அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகையிட்டனர்.
பாளையங்கோட்டை யூனியன் அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகை சீராக குடிநீர் வழங்க கோரிக்கை
Published on

நெல்லை,

பாளையங்கோட்டை கே.டி.சி. நகர் வடபகுதியில் உள்ளது கீழ நத்தம் பஞ்சாயத்து. இங்கு ஏராளமான பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இவர்களின் பயன்பாட்டுக்காக தாமிரபரணி ஆற்றில் இருந்து குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வந்தது.

இந்த நிலையில் கடந்த பல நாட்களாக குடிநீர் வினியோகம் செய்யப்படவில்லை என தெரிகிறது. இதுகுறித்து அப்பகுதி மக்கள் சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பலமுறை புகார் அளித்தும் எந்தவித நடவடிக்கையும் இல்லை.

இதில் ஆத்திரமடைந்த அப்பகுதி மக்கள் நேற்று பாளையங்கோட்டை யூனியன் அலுவலகத்திற்கு சென்று முற்றுகையிட்டனர். அப்போது அவர்கள் சீராக குடிநீர் வழங்க வேண்டும் என கோஷம் எழுப்பினர்.

இதுகுறித்து தகவலறிந்த அதிகாரிகள், அங்கு வந்து பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். அப்போது தினமும் லாரி மூலம் குடிநீர் வினியோகம் செய்யப்பட நடவடிக்கை எடுப்பதாக அதிகாரிகள் உறுதி அளித்தனர். இதையடுத்து பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இதனால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

X

Daily Thanthi
www.dailythanthi.com