அதிகாரிகள்- வியாபாரிகள் ஆலோசனை கூட்டம்

திருவேங்கடத்தில் அதிகாரிகள், வியாபாரிகள் ஆலோசனை கூட்டம் நடந்தது.
அதிகாரிகள்- வியாபாரிகள் ஆலோசனை கூட்டம்
Published on

திருவேங்கடம், ஜூன்:

திருவேங்கடம் கலைவாணி பள்ளியில் அதிகாரிகள், வியாபாரிகள் இடையே ஆலோசனை கூட்டம் நடந்தது. தென்காசி மாவட்ட கொரானா தடுப்பு திட்ட உதவி அலுவலர் ராஜாமணி தலைமை தாங்கினார்.

கூட்டத்தில் தமிழக அரசு அறிவித்துள்ள வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி வேண்டும், தனி மனித இடைவெளியை கடைப்பிடிக்க வேண்டும், முக கவசம் அணிந்து, கிருமி நாசினி கொண்டு கைகளை சுத்தம் செய்து கொரானா பரவலில் இருந்து தங்களையும் வாடிக்கையாளர்களையும் பாதுகாத்துக்கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டது. கூட்டத்தில் திருவேங்கடம் தாசில்தார் கண்ணன், குருவிகுளம் வட்டார வளர்ச்சி அலுவலர் சிவக்குமார், நகரப்பஞ்சாயத்து செயல் அலுவலர் ஜீவா, துணை தாசில்தார் ஜெயமுருகன், வருவாய் ஆய்வாளர் உமா மகேஸ்வரி, கிராம நிர்வாக அலுவலர் ஜெயா மற்றும் வியாபாரிகள் சங்க நிர்வாகிகள், வியாபாரிகள் கலந்துகொண்டனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com