கிருஷ்ணகிரி அருகே 2,500 ஆண்டுகள் பழமை வாய்ந்த பாறை ஓவியங்கள் கண்டுபிடிப்பு

2,500 ஆண்டுகள் பழமை வாய்ந்த பாறை ஓவியங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
கிருஷ்ணகிரி அருகே 2,500 ஆண்டுகள் பழமை வாய்ந்த பாறை ஓவியங்கள் கண்டுபிடிப்பு
Published on

கிருஷ்ணகிரி,

கிருஷ்ணகிரி மாவட்ட வரலாற்று ஆய்வு மையத்தின் தலைவர் கே.ஏ. மனோகரன், செயலாளர் குமார் ஆகியோரின் வழிகாட்டுதலின்படி, தொல்லியல் ஆய்வாளர்கள் பரந்தாமன் மற்றும் சுகவனமுருகன் ஆகியோர் கிருஷ்ணகிரி பகுதியில் தொல்லியல் கள ஆய்வு மேற்கொண்டனர். அதன்படி 2,500 ஆண்டுகள் பழமைவாய்ந்த பாறை ஓவியங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

கிருஷ்ணகிரியில் இருந்து மகராஜகடை செல்லும் சாலையில் மேல்பட்டி மலை உள்ளது. இந்த மலையில் உள்ள இயற்கையான குகையில் அமைந்துள்ள 3 பாறைஓவியங்கள் தீட்டப்பட்டுள்ளது. இந்த ஓவியங்களில் பாறையின் இரு ஓரங்களில் இரு வீரர்கள் குதிரையின் மேல் அமர்ந்துள்ளது போலும் நடுவில் ஒரு குறியீடு போன்றும் தீட்டப்பட்டுள்ளது. இந்த பாறை ஓவியத்தில் ஒரு வீரன் குதிரையின் மேல் அமர்ந்துள்ளான்.

அந்த குதிரையின் முன் இரு கால்கள் தூக்கி கொண்டு ஓட தயராக இருக்கிறது. மேலும், இந்த ஓவியம் செங்குத்தாக உள்ள பாறையின் மேல் தீட்டப்பட்டுள்ளது. எனவே, இவ்வீரன் போரில் இறந்திருப்பான். அவ்வீரனின் நினைவாக வழிபாட்டுக்காக இந்த ஓவியம் தீட்டப்பட்டு இருக்கலாம். மேலும் ஆய்வுகளை இப்பகுதியில் மேற்கொண்டு வருகிறோம். இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

X

Daily Thanthi
www.dailythanthi.com