பாலத்தில் நண்பர்களுடன் பேசிக்கொண்டிருந்தபோது பக்கிங்காம் கால்வாயில் தவறி விழுந்து முதியவர் பலி

ஜோதிநகர் அருகில் உள்ள பக்கிங்காம் கால்வாய் மீதுள்ள மேம்பாலத்தில் அமர்ந்து தனது நண்பர்களுடன் பேசிக்கொண்டிருந்தார்.
பாலத்தில் நண்பர்களுடன் பேசிக்கொண்டிருந்தபோது பக்கிங்காம் கால்வாயில் தவறி விழுந்து முதியவர் பலி
Published on

திருவொற்றியூர்,

திருவொற்றியூர் தியாகி சத்தியமூர்த்தி நகரைச் சேர்ந்தவர் சங்கரன் (வயது 74). இவர், மாநகர பஸ்சில் டிரைவராக வேலை பார்த்து ஓய்வுபெற்றவர். இவர், நேற்று முன்தினம் இரவு ஜோதிநகர் அருகில் உள்ள பக்கிங்காம் கால்வாய் மீதுள்ள மேம்பாலத்தில் அமர்ந்து தனது நண்பர்களுடன் பேசிக்கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராதவிதமாக அவர், பின்புறம் சாய்ந்து பக்கிங்காம் கால்வாய்க்குள் தவறி விழுந்து விட்டார். அக்கம் பக்கத்தினர் விரைந்து வந்து அவரை காப்பாற்ற முயன்றனர். அதற்குள் தண்ணீரில் மூழ்கி அவர் பரிதாபமாக இறந்து விட்டார்.

இது குறித்த தகவலின்பேரில் எண்ணூர் தீயணைப்பு படையினர் விரைந்து வந்து கால்வாயில் இருந்து சங்கரன் உடலை மீட்டனர். சம்பவம் குறித்து எண்ணூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து சங்கரன் உடலை பிரேத பரிசோதனைக்காக ஸ்டான்லி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்து மேலும் விசாரித்து வருகின்றனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com