அரசு பஸ்சில், கண்டக்டரிடம் பணம் திருடியவர் கைது

அரசு பஸ்சில், கண்டக்டரிடம் பணம் திருடியவர் கைது
அரசு பஸ்சில், கண்டக்டரிடம் பணம் திருடியவர் கைது
Published on

மொரப்பூர்:

கடத்தூர் அருகே உள்ள குருபரஅள்ளி பகுதியை சேர்ந்தவர் அரசு (வயது 48). அரசு பஸ் கண்டக்டர். நேற்று தர்மபுரியில் இருந்து திருவண்ணாமலைக்கு செல்லும் அரசு பஸ்சில் பணியில் இருந்தார். மொரப்பூரில் பஸ் நின்ற போது நடத்துனர் பயணிகளை இறங்கிக் கொண்டிருந்தார். அங்கு பயணி ஒருவருக்கு சில்லறை கொடுப்பதற்காக கண்டக்டர் பணப்பையை திறந்தபோது ஒரு நபர், கண்டக்டர் பையில் இருந்து பணத்தை திருடிகொண்டு தப்பி ஓட முயன்றார். பொதுமக்கள் அந்த நபரை பிடித்து மொரப்பூர் போலீசில் ஒப்படைத்தனர். அவரிடம் போலீசார் விசாரணை நடத்தியபோது அந்த நபர் அரூர் அம்பேத்கர் காலனியை சேர்ந்த அறிவுமணி (36) என்பது தெரிய வந்தது. இதையடுத்து அவரை போலீசார் கைது செய்தனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com