தர்மபுரி மாவட்டத்தில் கொரோனாவுக்கு ஒருவர் பலி

தர்மபுரி மாவட்டத்தில் கொரோனாவுக்கு ஒருவர் பலியானார்.
தர்மபுரி மாவட்டத்தில் கொரோனாவுக்கு ஒருவர் பலி
Published on

தர்மபுரி:

தர்மபுரி மாவட்டத்தில் நேற்று மேலும் 29 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டது. மாவட்டத்தில் ஏற்கனவே சிகிச்சை பெற்று வந்தவர்களில் 17 பேர் நேற்று குணமடைந்து வீடு திரும்பினார்கள். தற்போது 237 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள். இந்த தொற்றால் பாதிக்கப்பட்ட ஒருவர் நேற்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதன்படி மாவட்டத்தில் இதுவரை மொத்தம் 254 பேர் கொரோனா தொற்றால் உயிரிழந்துள்ளனர். மாவட்டம் முழுவதும் இதுவரை 27 ஆயிரத்து 312 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com