பெரம்பலூர் மாவட்டத்தில் கொரோனாவுக்கு ஒருவர் பலி

பெரம்பலூர் மாவட்டத்தில் கொரோனாவுக்கு ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்
பெரம்பலூர் மாவட்டத்தில் கொரோனாவுக்கு ஒருவர் பலி
Published on

பெரம்பலூர்
பெரம்பலூர் மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் பெரம்பலூர் வட்டாரத்திற்கு உட்பட்ட பகுதிகளில் 98 பேரும், வேப்பந்தட்டை வட்டாரத்தில் 78 பேரும், வேப்பூர் வட்டாரத்தில் 31 பேரும், ஆலத்தூர் வட்டாரத்தில் 29 பேரும் என மொத்தம் 236 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் மாவட்டத்தில் பாதிப்பு எண்ணிக்கை மொத்தம் 8,905 ஆக உயர்ந்துள்ளது.
இந்தநிலையில் கொரோனாவுக்கு திருச்சியில் உள்ள தனியார் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற பெரம்பலூர் மாவட்டம், குன்னம் தாலுகா வி.அகரம் நடுத்தெருவை சேர்ந்த 57 வயதுடைய ஆண் ஒருவர் நேற்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதனால் மாவட்டத்தில் கொரோனாவினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 63 ஆக உயர்ந்துள்ளது.மருத்துவமனைகளில் 6,362 பேர் சிகிச்சை பெற்று வீடு திரும்பியுள்ளனர். தற்போது 2,480 பேர் கொரோனாவுக்கு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com