பனை விதைகள் விதைக்கும் நிகழ்ச்சி

வடக்கனந்தல் பேரூராட்சி சார்பில் பனை விதைகள் விதைக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
பனை விதைகள் விதைக்கும் நிகழ்ச்சி
Published on

கச்சிராயப்பாளையம்,

வடக்கனந்தல் பேரூராட்சி சார்பில் அப்பகுதியில் உள்ள 10-க்கும் மேற்பட்ட ஏரிகளில் பனை விதைகள் மற்றும் மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதற்கு செயல் அலுவலர் ஆறுமுகம் தலைமை தாங்கினார். பேரூராட்சி மன்ற துணைத்தலைவர் தண்டபாணி, பேரூராட்சி முதல் நிலை அலுவலர் வைத்தியநாதன், குடிநீர் திட்ட அலுவலர்கள் ராமச்சந்திரன், லட்சுமணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு அழைப்பாளராக பேரூராட்சி மன்ற தலைவர் பன்னீர்செல்வம் கலந்துகொண்டு ஏரிக்கரைகளில் 1000 பனை விதைகளை விதைத்தார். மேலும் மரக்கன்றுகளை நட்டு வைத்தார். இதில் பணி மேற்பார்வையாளர் ராஜா, ஊர் முக்கியஸ்தர்கள் முத்து.கரிகாலன், திருமால், வெங்கடேஷ்., திலீப்.பிரசாந்த், கலையரசன் மற்றும் பேரூராட்சி மன்ற கவுன்சிலர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com