குடிநீர் கேட்டு அமரகுந்தி ஊராட்சி மன்ற அலுவலகத்தை காலிக்குடங்களுடன் பொதுமக்கள் முற்றுகை சாலைமறியலுக்கும் முயன்றதால் பரபரப்பு

குடிநீர் கேட்டு அமரகுந்தி ஊராட்சி மன்ற அலுவலகத்தை பொதுமக்கள் காலிக்குடங்களுடன் முற்றுகையிட்டனர். சாலைமறியலுக்கும் முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.
குடிநீர் கேட்டு அமரகுந்தி ஊராட்சி மன்ற அலுவலகத்தை காலிக்குடங்களுடன் பொதுமக்கள் முற்றுகை சாலைமறியலுக்கும் முயன்றதால் பரபரப்பு
Published on

தாரமங்கலம்,

தாரமங்கலம் ஊராட்சி ஒன்றியம் அமரகுந்தி கிராமத்தில் உள்ள நெய்காரன்வளவு, தாண்டான்வளவு, பாலாஜி நகர் ஆகிய பகுதிகளில் கடந்த 6 மாதங்களாக குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டது. பொங்கல் பண்டிகை நேரத்தில் கூட தண்ணீர் கிடைக்காமல் போனதால் மக்கள் ஆத்திரமடைந்தனர்.

நேற்று பொதுமக்கள் ஊராட்சி மன்ற அலுவலகத்திற்கு காலிக்குடங்களுடன் திரண்டு வந்து அலுவலகத்தை முற்றுகையிட்டனர். அப்போது சாலைமறியல் செய்ய முயன்றனர்.

தகவல் அறிந்ததும் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தாரமங்கலம் இன்ஸ்பெக்டர் தட்சிணாமூர்த்தி மற்றும் போலீசார் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். தட்டுப்பாடு இல்லாமல் குடிநீர் கிடைக்க வழிவகை செய்ய ஏற்பாடு செய்வதாக கூறி சென்றனர். இதனால் அமரகுந்தி பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

X

Daily Thanthi
www.dailythanthi.com