மண்ணிவாக்கம் ஊராட்சியில் முககவசம் அணியாதவர்களுக்கு அபராதம்

தமிழகத்தில் மீண்டும் கொரோனா தொற்று அதிகரிப்பு காரணமாக பொதுமக்கள் முககவசம் அணியாவிட்டால் அபராதம் விதிக்கப்படும் என தமிழக அரசு அதிரடி உத்தரவு பிறப்பித்திருந்தது.
மண்ணிவாக்கம் ஊராட்சியில் முககவசம் அணியாதவர்களுக்கு அபராதம்
Published on

இந்தநிலையில் நேற்று செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் உத்தரவுபடி காட்டாங்கொளத்தூர் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் பாபு, ஹரிகிருஷ்ணன் ஆகியோர் ஆணைப்படி மண்ணிவாக்கம் ஊராட்சி பகுதியில் முக கவசம் அணியாமல் சாலையில் நடந்து செல்லும் பொதுமக்கள் மற்றும் மோட்டார் சைக்கிளில் செல்லும் வாகன ஓட்டிகளுக்கு ஊராட்சி மன்ற செயலர் டி.ராமபக்தன் ரூ.200 அபராதம் விதித்தார்.

மேலும் மண்ணிவாக்கம் பகுதியில் உள்ள அனைத்து கடைகளுக்கும் ஊராட்சி செயலர் கடையில் வேலை செய்யும் ஊழியர்கள் மற்றும் கடைக்கு வரும் நபர்கள் கண்டிப்பாக முக கவசம் அணிந்து, சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com