திருவள்ளூரில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்

திருவள்ளூரில் உள்ள மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் நேற்று மாவட்ட கலெக்டர் டாக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் தலைமையில் பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது.
திருவள்ளூரில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்
Published on

அப்போது மாவட்டத்தின் பல்வேறு பகுதியில் இருந்து வந்திருந்த திரளான பொதுமக்கள் சாலை வசதி, குடிநீர் வசதி, பசுமைவீடு, வீட்டுமனை பட்டா உள்ளிட்ட 238 மனுக்களை அளித்தனர். அந்த மனுக்களை பெற்றுக்கொண்ட கலெக்டர் அதன் மீது உரிய நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தார்.

அதைத் தொடர்ந்து மாற்றுத் திறனாளிகள் நலத்துறை சார்பாக நடைபெற்ற மாற்றுத்திறனாளிகள் சிறப்பு குறை தீர்க்கும் நாள் கூட்டத்திலும் கலெக்டர் கலந்து கொண்டு மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

இந்த நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் மீனா பிரியதர்ஷினி, மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (தேர்தல்) முரளி, தனித் துணை கலெக்டர் கார்த்திகேயன், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர் மதுசூதனன், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை அலுவலர் கலைச்செல்வி, மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் பாபு மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com