குறவர் இன குலதெய்வ சிலைகளை கடலில் வீசியவர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி மனு

குறவர் இன குலதெய்வ சிலைகளை கடலில் வீசியவர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி மனு அளிக்கப்பட்டது.
குறவர் இன குலதெய்வ சிலைகளை கடலில் வீசியவர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி மனு
Published on

பெரம்பலூர்:

பெரம்பலூர் மாவட்ட இந்து முன்னணி செயலாளர் செல்வகுமார் தலைமையில் ஆலத்தூர் தாலுகா காரை மலையப்ப நகரை சேர்ந்த குறவர் இன மக்கள் நேற்று போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்திற்கு வந்து ஒரு மனு கொடுத்தனர். அதில், திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி கிராமம் ஆவடி லட்சுமி நகரில் வசித்து வரும் குறவர் இனத்தை சேர்ந்த ஒருவர் தற்போது கிறிஸ்தவ மதத்துக்கு மாறியதோடு, நாங்கள் காலம், காலமாக வணங்கி வரும் குலதெய்வ சிலைகளை கடலில் போட்டதுடன், அதனை வீடியோ எடுத்து சமூக வலைத்தளங்களில் பதிவிட்டுள்ளார். குறவர் இன குலதெய்வ சிலைகளை கடலில் வீசியவரை கைது செய்து, அந்த சிலைகளை மீட்டுத்தர நடவடிக்கை எடுக்க தமிழக அரசுக்கு வலியுறுத்த வேண்டும், என்று கூறியிருந்தனர். மேலும் அவர்கள் நாட்டில் கட்டாய மதமாற்ற தடை சட்டத்தை அமலுக்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்க மத்திய அரசுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com