கன்னியாகுமரி தூய அலங்கார உபகார மாதா ஆலயத்தில் இரு தங்க தேர்பவனி திரளான பக்தர்கள் பங்கேற்பு

கன்னியாகுமரி தூய அலங்கார உபகார மாதா ஆலயத்தில் இரு தங்க தேர் பவனி நடைபெற்றது.
கன்னியாகுமரி தூய அலங்கார உபகார மாதா ஆலயத்தில் இரு தங்க தேர்பவனி திரளான பக்தர்கள் பங்கேற்பு
Published on

கன்னியாகுமரி,

கன்னியாகுமரி தூய அலங்கார உபகார மாதா ஆலய திருவிழா கடந்த 6-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடந்து வந்தது. விழா நாட்களில் திருப்பலி, ஜெபமாலை, நற்கருணை, ஆராதனை ஆகியவை நடந்தது.

9-ம் நாள் திருவிழாவன்று காலை நோயாளிகளுக்கான திருப்பலி, இரவு புனித சூசையப்பரின் தங்க தேர் பவனி ஆகியவை நடந்தது. இதில் திரளானவர்கள் கலந்து கொண்டனர்.

இரு தங்க தேர்பவனி

விழாவின் கடைசி நாளான நேற்று அதிகாலை 4 மணிக்கு தங்க தேர் திருப்பலி, காலை 6 மணிக்கு பெருவிழா நிறைவு திருப்பலி, 9 மணிக்கு சூசையப்பர் மற்றும் மாதா இரு தங்க தேர் பவனி ஆகியவை நடைபெற்றது.

இதில் திரளான பக்தர்கள் பங்கேற்றனர். 10.30 மணிக்கு மலையாள திருப்பலி, மாலை 6 மணிக்கு கொடியிறக்கம், நற்கருணை ஆசிரும், இரவு 8 மணிக்கு நாடகமும் நடைபெற்றது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com