திருப்பூரில் பரிதாபம்: பெண் வக்கீல் தூக்குப்போட்டு தற்கொலை

திருப்பூரில் பெண் வக்கீல் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார்.
திருப்பூரில் பரிதாபம்: பெண் வக்கீல் தூக்குப்போட்டு தற்கொலை
Published on

அனுப்பர்பாளையம்,

திருப்பூர் அங்கேரிபாளையத்தை அடுத்த வெங்கமேடு அலமேலுநகரை சேர்ந்தவர் பூபதி (வயது 53). இவருடைய மகள் மோகனபிரியா (26). இவர் ஒரு வக்கீலிடம் ஜூனியர் வக்கீலாக பயிற்சி பெற்று வந்தார். இந்த நிலையில் மோகனபிரியா நேற்று முன்தினம் இரவு திடீரென வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை முயற்சியில் ஈடுபட்டார்.

உடனே அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக அவினாசி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர், மோகனபிரியா ஏற்கனவே இறந்து விட்டார் என்று தெரிவித்தார்.

இதுகுறித்து அனுப்பர்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள். திருமணம் ஆகாத விரக்தியில் இருந்த மோகனபிரியா தூக்குப்போட்டு தற்கொலை செய்து இருக்கலாம் என போலீசார் தெரிவித்தனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com