10 வயது சிறுமி ஆசையாக வளர்த்த செடியை கோழி சேதப்படுத்தியதால் இருதரப்பினர் மோதல் 7 பேர் காயம்

சென்னை அயனாவரம், 10 வயது சிறுமி ஆசையாக வளர்த்த செடியை கோழி சேதப்படுத்தியதால் இருதரப்பினர் மோதல் ஏற்பட்டு 7 பேர் காயம் அடைந்தனர்.
10 வயது சிறுமி ஆசையாக வளர்த்த செடியை கோழி சேதப்படுத்தியதால் இருதரப்பினர் மோதல் 7 பேர் காயம்
Published on

திரு.வி.க. நகர்,

சென்னை அயனாவரம் வசந்தா கார்டன் பகுதியில் வசித்து வருபவர் வெள்ளையம்மாள் (வயது 55). இவருடைய பேத்தி மரியா (10). இவள், 5-ம் வகுப்பு படித்து வருகிறாள்.

மரியா தனது வீட்டில் ஆசையாக ஒரு செடியை வளர்த்து வந்தாள். பக்கத்து வீட்டைச்சேர்ந்த பாஷா (50) என்பவரது கோழி, சிறுமி மரியா வளர்த்து வந்த செடியை கொத்தி பிடுங்கி சேதப்படுத்தியதாக கூறப்படுகிறது.

இதனால் இரு தரப்பினருக்கும் இடையே வாக்குவாதம் முற்றி கைகலப்பாக மாறியது. இந்த மோதலில் 2 தரப்பினரும் கத்தி மற்றும் கற்களால் மாறி மாறி தாக்கிக்கொண்டனர். இதில் சிறுமி மரியா உள்பட இரு தரப்பினரையும் சேர்ந்த 7 பேர் காயம் அடைந்தனர். அனைவரும் கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுபற்றி அயனாவரம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com