

பரமத்திவேலூர்:
பாண்டமங்கலம் பேரூராட்சி பகுதியில் உள்ள கடைகள், ஓட்டல்களில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் அதிகளவில் பயன்படுத்தப்படுவதாக புகார்கள் எழுந்தன. அதன்பேரில் பேரூராட்சி செயல் அலுவலர் திலகராஜ் தலைமையிலான குழுவினர் திடீர் ஆய்வு மேற்கொண்டனர். அந்த ஆய்வின் போது கடைகளில் தமிழக அரசால் தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக் பைகள், கப்புகள் ஆகியவை விற்பனை செய்தது தெரியவந்தது. இதையடுத்து விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்த சுமார் 3 கிலோ பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு அபராதம் விதிக்கப்பட்டது. தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்தினாலோ அல்லது விற்பனை செய்தாலோ கடைக்கு சீல் வைக்கப்படும் என்று பேரூராட்சி செயல் அலுவலர் திலகராஜ் எச்சரிக்கை விடுத்தார்.