பள்ளி மாணவியை திருமணம் செய்த வாலிபர் போக்சோவில் கைது

பள்ளி மாணவியை திருமணம் செய்த வாலிபர் போக்சோவில் கைது செய்யப்பட்டார்.
பள்ளி மாணவியை திருமணம் செய்த வாலிபர் போக்சோவில் கைது
Published on

நொய்யல்,

திண்டுக்கல் மாவட்டம் குஜிலியம்பாறை அருகே தாதனூர் பகுதியை சேர்ந்தவர் ராமன். இவரது மகன் மாரிமுத்து (வயது 27). இவர் கரூர் மாவட்டத்தை சேர்ந்த 17 வயதுடைய 9-ம் வகுப்பு மாணவியை கடத்தி சென்று தாந்தோணிமலையில் திருமணம் செய்து கொண்டார். பின்னர் அந்த சிறுமியை பாலியல் தொந்தரவு செய்துள்ளார். தற்போது அந்த சிறுமி 9 மாத கர்ப்பிணியாக உள்ளார்.

மாரிமுத்துவின் தொந்தரவு தாங்க முடியாத சிறுமி இதுகுறித்து வேலாயுதம்பாளையம் போலீசில் புகார் அளித்தார். இதன்பேரில் இன்ஸ்பெக்டர் வினோதினி சிறுமியை கடத்தி சென்று திருமணம் செய்து பாலியல் வன்கொடுமை செய்த மாரிமுத்துவை போக்சோ சட்டத்தில் கைது செய்து தீவிர விசாரணை நடத்தி வருகிறார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com