

குளித்தலை,
கிருஷ்ணராயபுரம் தாலுகாவுக்குட்பட்ட பழைய ஜெயங்கொண்ட சோழபுரம் பகுதியை சேர்ந்தவர் ஆனந்த் என்கிற அறிவானந்தம் (வயது 28). எலக்ட்ரீசியனான இவர் 2-ம் வகுப்பு படிக்கும் 8 வயதான ஒரு சிறுவனுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார். மேலும் இதுகுறித்து யாரிடமும் சொல்லக்கூடாது என மிரட்டியுள்ளார். இந்த சம்பவம் குறித்து சிறுவனின் பெற்றோர் கொடுத்த புகாரின் பேரில் குளித்தலை அனைத்து மகளிர் போலீசார் வழக்குப்பதிவு செய்து போக்சோ சட்டத்தின் கீழ் அறிவானந்தத்தை கைது செய்தனர்.