

அன்னவாசல்,
புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்த 14 வயது சிறுமி மாயமானதாக அவரது பெற்றோர் அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இதில் அந்த சிறுமியை அன்னவாசல் அருகேயுள்ள மேலச்சித்தக்குடிபட்டியை சேர்ந்த நல்லுச்சாமி மகன் பசுபதி (வயது 24) என்பவர் கடத்தி சென்று திருமணம் செய்தது தெரியவந்தது. இதற்கு பசுபதியின் தந்தை உள்பட 3 பேர் உடந்தையாக இருந்ததும் தெரியவந்தது.
இதையடுத்து, அன்னவாசல் இன்ஸ்பெக்டர் சந்திரசேகரன், சப்-இன்ஸ்பெக்டர் நாகராஜ் உள்ளிட்ட தனிப்படை போலீசார் திருப்பூரில் தங்கி இருந்த சிறுமியை மீட்டனர். மேலும், சிறுமியை திருமணம் செய்த பசுபதி, அவரின் தந்தை நல்லுச்சாமி (50), உறவினர் சசிகுமார் (24) ஆகிய 3 பேரையும் போக்சோ சட்டத்தில் கைது செய்து கீரனூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தி அறந்தாங்கி சிறையில் அடைத்தனர். மேலும், இந்த வழக்கில் தொடர்புடைய ஒரு பெண்ணை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.