மாவட்ட செய்திகள்
போக்சோ சட்டத்தில் வாலிபர் கைது
பிளஸ்-2 மாணவியை ஆபாச படம் எடுத்து மிரட்டிய வாலிபர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.
புதுக்கோட்டை,
புதுக்கோட்டை அருகே முள்ளூர் பகுதியை சேர்ந்தவர் ஈஸ்வரன் (வயது 19). இவர் பிளஸ்-2 மாணவி ஒருவரை காதலித்து வந்தார். பின்னர் அவரை ஆபாசமாக படம் எடுத்து வைத்து மிரட்டியதாக கூறப்படுகிறது. இதுதொடர்பாக பாதிக்கப்பட்ட மாணவி அளித்த புகாரின் பேரில் புதுக்கோட்டை அனைத்து மகளிர் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து ஈஸ்வரனை கைது செய்தனர்.

