மணல் திருட்டு வழக்கில் சாட்சி சொல்ல வராத பெண் போலீஸ் இன்ஸ்பெக்டருக்கு பிடிவாரண்டு

மணல் திருட்டு வழக்கில் சாட்சி சொல்ல வராத பெண் போலீஸ் இன்ஸ்பெக்டருக்கு பிடிவாரண்டு
மணல் திருட்டு வழக்கில் சாட்சி சொல்ல வராத பெண் போலீஸ் இன்ஸ்பெக்டருக்கு பிடிவாரண்டு
Published on

தஞ்சாவூர்,

தஞ்சையை அடுத்த கள்ளப்பெரம்பூர் போலீஸ் நிலையத்தில் சப்-இன்ஸ்பெக்டராக பணி புரிந்து வந்தவர் சர்மிளா. இவர் அனுமதியின்றி ஆற்றில் மணல் அள்ளியதாக 5 பேர் மீது மணல் திருட்டு வழக்குப்பதிவு செய்தார். இந்த வழக்கு தஞ்சை 2-வது நீதித்துறை நடுவர் மன்றத்தில் நடைபெற்று வருகிறது. வழக்கு விசாரணையின்போது சாட்சி சொல்வதற்காக சர்மிளா ஆஜராகவில்லை. இந்த வழக்கில் ஆஜராகி சாட்சி சொல்ல வேண்டும் என்று சம்மன் அனுப்பப்பட்டது. அதன்பின்னரும் ஆஜராகாததால் சர்மிளாவுக்கு பிடிவாரண்டு பிறப்பித்து நீதித்துறை நடுவர் ராமசங்கரன் நேற்று உத்தரவு பிறப்பித்தார். சர்மிளா தற்போது கும்பகோணம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் இன்ஸ்பெக்டராக பணிபுரிந்து வருகிறார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com