

செங்கோட்டை, மார்ச்:
தமிழகம் உள்ளிட்ட 5 மாநிலங்களில் தேர்தல் நடைபெறுவதையொட்டி மாநில எல்லை பகுதிகளில் போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். இதையடுத்து தென்காசி மாவட்டம் செங்கோட்டை அருகே உள்ள தமிழக- கேரள எல்லை பகுதியில் இருக்கும் புளியரை கோட்டைவாசல் சோதனை சாவடியில் தென்காசி துணை போலீஸ் சூப்பிரண்டு கோகுலகிருஷ்ணன், கேரள மாநிலம் கொல்லம் மாவட்ட கலால் பிரிவு அதிகாரி ரஞ்சித் ஆகியோர் தலைமையில் 50-க்கும் மேற்பட்ட இரு மாநில போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.