மோட்டார் சைக்கிளில் இருந்து தவறி விழுந்த போலீஸ்காரர் பலி

மோட்டார் சைக்கிளில் இருந்து தவறி விழுந்த போலீஸ்காரர் பரிதாபமாக இறந்தார்.
மோட்டார் சைக்கிளில் இருந்து தவறி விழுந்த போலீஸ்காரர் பலி
Published on

சென்னை வேளச்சேரியை சேர்ந்தவர் கண்ணன் (வயது 29). இவர், சென்னை மாநகர ஆயுதப்படையில் போலீஸ்காரராக பணியாற்றி வந்தார். இவரது சொந்த ஊர் சேலம் மாவட்டம் நாழிக்கல்பட்டி அடுத்த கொழிஞ்சிபட்டி ஆகும். இவர் நேற்று மாலை தனது மோட்டார் சைக்கிளில் பணிக்கு சென்றார்.

கிண்டி வனத்துறை அலுவலகம் அருகே வந்தபோது திடீரென நிலை தடுமாறி மோட்டார் சைக்கிளில் இருந்து தவறி சாலையில் விழுந்தார். இதில் தலையில் பலத்த காயம் அடைந்த போலீஸ்காரர் கண்ணன், பரிதாபமாக இறந்தார். இதுபற்றி கிண்டி போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com