போந்தூர், உத்திரமேரூரில் ரேஷன் கார்டுதாரர்களுக்கு பொங்கல் பரிசுத்தொகுப்பு

போந்தூர், உத்திரமேரூரில் ரேஷன் கார்டுதாரர்களுக்கு பொங்கல் பரிசுத்தொகுப்பு வழங்கப்பட்டது.
போந்தூர், உத்திரமேரூரில் ரேஷன் கார்டுதாரர்களுக்கு பொங்கல் பரிசுத்தொகுப்பு
Published on

ஸ்ரீபெரும்புதூர்,

ஸ்ரீபெரும்புதூர் ஒன்றியம் போந்தூர் ஊராட்சியில் பொங்கல் பரிசுத்தொகுப்பு வழங்கும் நிகழ்ச்சி முன்னாள் ஒன்றிய செயலாளர் போந்தூர் செந்தில்ராஜன் தலைமையில் நடைபெற்றது. காஞ்சீபுரம், திருவள்ளுர் மாவட்ட கூட்டுறவு விற்பனை சங்க துணைத்தலைவர் போந்தூர் சேட்டு முன்னிலை வகித்தார். இதில் ஸ்ரீபெரும்புதூர் எம்.எல்.ஏ., மதனந்தபுரம் கே.பழனி கலந்து கொண்டு பொதுமக்களுக்கு பொங்கல் பரிசுத்தொகுப்பு மற்றும் ரூ.1000 வழங்கினார்.

இதில் ஒன்றிய செயலாளர் முனுசாமி, முன்னாள் ஒன்றிய குழுத்தலைவர் சிவக்குமார், முன்னாள் ஒன்றிய கவுன்சிலர் பாபு உள்பட பலர் கலந்துகொண்டனர்.

உத்திரமேரூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் பொங்கல் பரிசுத்தொகுப்பு வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. இந்த நிகழ்ச்சியில் காஞ்சீபுரம் மேற்கு மாவட்ட அ.தி.மு.க. செயலாளர் வாலாஜாபாத் கணேசன் தலைமை தாங்கினார். விழாவில் காஞ்சீபுரம் எம்.பி. மரகதம் குமரவேல், அ.தி.மு.க. அமைப்பு செயலாளர் சோமசுந்தரம் ஆகியோர் கலந்து கொண்டு பொங்கல் பரிசுத்தொகுப்பை வழங்கினார்கள் ஒன்றிய செயலாளர் பிரகாஷ்பாபு அனைவரையும் வரவேற்றார். தருமன், வேலு, களியாம்பூண்டி தங்கபஞ்சாட்சரம், துரைபாபு, திருவந்தவார்முருகன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com