பரமத்திவேலூர் பகுதியில், பொங்கல் பண்டிகையை முன்னிட்டு மண் பானைகள் தயாரிக்கும் பணி தீவிரம் இலவச களி மண் வழங்க கோரிக்கை

பரமத்திவேலூர் பகுதியில், பொங்கல் பண்டிகையை முன்னிட்டு மண் பானைகள் தயாரிக்கும் பணி தீவிரம் இலவச களி மண் வழங்க கோரிக்கை
பரமத்திவேலூர் பகுதியில், பொங்கல் பண்டிகையை முன்னிட்டு மண் பானைகள் தயாரிக்கும் பணி தீவிரம் இலவச களி மண் வழங்க கோரிக்கை
Published on

பரமத்திவேலூர்:

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு பரமத்திவேலூர் பகுதியில் மண் பானைகள் தயாரிக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

மண் பானை

பரமத்திவேலூர் தாலுகா கு.அய்யம்பாளையம், பாகம்பாளையம், பொன்நகர், தீர்த்தாம்பாளையம், பாலப்பட்டி, ராமநாயக்கன்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் ஏராளமான மண் பானை தொழிலாளர்கள் வசித்து வருகின்றனர். இந்த நிலையில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு மண் பானை மற்றும் மண் அடுப்புகள் தயாரிக்கும் பணியில் ஏராளமான தொழிலாளர்கள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். சமைப்பதற்கு அதிகளவில் பயன்படுத்தப்பட்ட மண் பானை தற்போது ஒரு சில கிராம பகுதிகள் மற்றும் மண்பானை உணவகங்களில் மட்டும் பயன்படுத்தப்பட்டு வருகிறது.

இதனால் மண்பானை தயாரிக்கும் தொழிலில் ஈடுபட்டுள்ள ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் தங்களது தொழிலை தொடர்ந்து செய்ய முடியாமல் மாற்று தொழிலுக்கு செல்ல வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. மேலும் இந்த தொழில் காலப்போக்கில் அழிந்து விடுமோ என்ற அச்சமும் மண்பானை தயாரிக்கும் தொழிலாளர்களிடையே ஏற்பட்டுள்ளது.

நேர்த்திக்கடன்

கார்த்திகை மாதத்தில் தங்கள் வீடுகளில் கார்த்திகை தீபத்தை ஏற்றி பொதுமக்கள் களிமண்ணால் செய்யப்பட்ட அகல் விளக்குகளை வாங்கி பயன்படுத்துகின்றனர். கோவில் திருவிழா காலங்களில் களிமண்ணால் செய்யப்பட்ட சாமி உருவங்கள், விலங்குகள் மற்றும் பல்வேறு வகையான பொம்மைகளை பொதுமக்கள் வாங்கி சென்று கோவில்களில் வைத்து தங்களது நேர்த்திக்கடனை செலுத்தி வருகின்றனர்.

பொங்கல் பண்டிகையில் மாட்டு பொங்கல் மற்றும் வாசல் பொங்கல் ஆகியவற்றுக்கு மண்பானைகளை வாங்கி சென்று பொங்கல் வைக்கின்றனர். விஷேச காலங்களில் மட்டும் பொங்கல் பானைகள், அகல் விளக்குகள், சிதை பொம்மைகள் ஆகியவற்றை பொதுமக்கள் வாங்கி வருகின்றனர். தற்போது பொங்கல் பண்டிகை நெருங்கி வருவதால் மண்பானைகள் செய்யும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

இலவச களி மண்

மண்பானை தொழிலில் ஈடுபட்டுள்ள தொழிலாளர்கள் களிமண்ணை பணம் கொடுத்து வாங்க வேண்டிய சூழ்நிலை உருவாகியுள்ளதால் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர். மண் பானை தயாரிப்பில் ஈடுபட்டுள்ள தொழிலாளர்கள் களிமண்ணை இலவசமாக எடுத்துக்கொள்ள அந்தந்த மாவட்ட நிர்வாகங்கள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தற்போது ஒரு படி முதல் 3 படி அரிசி வரை வைத்து பொங்கல் வைக்கும் பானைகள் மற்றும் சிறிய சாம்பார் சட்டிகள் ஆகியவற்றை தயாரிக்கும் பணியில் தொழிலாளர்கள் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com