நாளை மின்தடை

சிவகாசி பகுதியில் பராமரிப்பு பணிகளுக்காக நாளை மின்தடை செய்யப்படுகிறது.
நாளை மின்தடை
Published on

சிவகாசி,

சிவகாசி நகர்ப்புற மற்றும் பாறைப்பட்டி, நாரணாபுரம் ஆகிய துணை மின் நிலையங்களில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன. இதனால் இந்த துணை மின் நிலையங்களில் இருந்து மின்வினியோகம் பறும் பகுதிகளான பாறைப்பட்டி, பள்ளப்பட்டி, விஸ்வநத்தம், மாரியம்மன் கோவில், ஜக்கம்மாள் கோவில், பஸ் நிலையம், நாரணாபுரம் ரோடு மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகள், அண்ணாநகர், காரனேசன் காலனி, பழனியாண்டவர் புரம்காலனி, நேரு ரோடு, பராசக்தி காலனி, வடக்கு ரதவீதி, வேலாயுதம் ரஸ்தா, அண்ணா காலனி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் நாளை (வெள்ளிக்கிழமை) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்வினியோகம் இருக்காது. அதேபோல பள்ளபட்டி, லிங்கபுரம் காலனி, ராஜீவ் காந்தி நகர், கண்ணாநகர், அம்மன் நகர், காமராஜபுரம், 56 வீட்டு காலனி, ஐஸ்வர்யா நகர், அரசன் நகர், சீனிவாச நகர், பர்மா காலனி, போஸ் காலனி, முத்துராமலிங்க நகர், இந்திரா நகர், முருகன் காலனி, எம்.ஜி.ஆர். காலனி, மீனாட்சி காலனி, நாரணாபுரம் ரோடு மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் வினியோகம் இருக்காது. மேற்கண்ட தகவலை சிவகாசி மின் பகிர்மான செயற்பொறியாளர் முரளிதரன் கூறினார்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com