குத்தாலம், பாலையூர், மேக்கிரிமங்கலத்தில் நாளை மின் நிறுத்தம்

குத்தாலம், பாலையூர், மேக்கிரிமங்கலத்தில் நாளை மின் நிறுத்தம் செய்யப்படுகிறது
குத்தாலம், பாலையூர், மேக்கிரிமங்கலத்தில் நாளை மின் நிறுத்தம்
Published on

மயிலாடுதுறை

குத்தாலம், பாலையூர் மற்றும் மேக்கிரிமங்கலம் துணை மின் நிலையங்களில் நாளை(செவ்வாய்க்கிழமை) பராமரிப்பு பணிகள் நடக்கிறது. எனவே இந்த துணை மின் நிலையங்களில் இருந்து மின் வினியோகம் பெறும் பாலையூர், தேரழுந்தூர், கோமல், மருத்தூர், மாந்தை, வடமட்டம், கோனேரிராஜபுரம், கோடிமங்கலம், பழையகூடலூர், கொக்கூர், பேராவூர், கரைகண்டம், கருப்பூர், திருவாலங்காடு, திருவாவடுதுறை, குத்தாலம் டவுன், சேத்திரபாலபுரம், மாதிரிமங்கலம், அரையபுரம் மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமங்களில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் வினியோகம் இருக்காது. இந்த தகவலை மயிலாடுதுறை மின்வாரியத்தினர் தெரிவித்து உள்ளனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com