நாளை மின்தடை

பராமரிப்பு பணிகளுக்காக விருதுநகரில் நாளை மின்தடை செய்யப்படுகிறது.
நாளை மின்தடை
Published on

விருதுநகர்,

விருதுநகர் மின் கோட்டத்தில் விருதுநகர் நகர் பகுதி மற்றும் என்.ஜி.ஓ. நகரப் பகுதியில் நாளை (வியாழக்கிழமை) காலை 9.30 மணி முதல் மாலை 4 மணி வரை மின்கம்பிகளை மாற்றும் பணி மேற்கொள்ள உள்ளது. எனவே விருதுநகர்-மதுரை ரோடு, கச்சேரி ரோடு, கணேஷ் நகர், வேலுச்சாமி நகர், லட்சுமி காலனி, நேருஜி நகரில் சில பகுதிகள் என்.ஜி.ஓ. நகர் பகுதியில் முத்தமிழ் வீதி அம்மன் வீதி, வி.வி.வி.பெண்கள் கல்லூரி பகுதிகளில் மின்வினியோகம் இருக்காது. மேற்கண்ட தகவலை மின் வாரிய நிர்வாக என்ஜினீயர் அகிலாண்டேஸ்வரி கூறினார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com