

விருதுநகர்,
விருதுநகர் துணை மின் நிலையத்தில் நாளை (வியாழக்கிழமை) பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன. ஆதலால் இந்த துணை மின் நிலையத்தில் இருந்து மின் வினியோகம் பெறும் பகுதிகளான விருதுநகர் நகர் பகுதி, புறநகர் பகுதிகளான பெரியவள்ளிகுளம், ஆர்.எஸ். நகர், அல்லம்பட்டி, லட்சுமி நகர், என்.ஜி.ஓ. நகர், வேல்சாமி நகர், கருப்பசாமி நகர், வடமலைக்குறிச்சி, பேராலி, பாவாலி, ஆமத்தூர், வெள்ளூர், மூளிப்பட்டி, சத்திர ரெட்டியபட்டி, ரயில் பாதைக்கு கிழக்கே உள்ள பாண்டியன் நகர், முத்தால் நகரின் ஒரு பகுதி, கே.கே.எஸ்.எஸ்.என். நகர், சத்யசாய் நகர், காந்திநகர், பேராலிரோடு உள்ளிட்ட பகுதிகளில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் வினியோகம் இருக்காது. மேற்கண்ட தகவலை மின் வாரிய நிர்வாக என்ஜினீயர் அகிலாண்டேஸ்வரி கூறினார்.