தூக்கில் தொங்குவது போல் கணவருக்கு வாட்ஸ் அப்பில் புகைப்படம் அனுப்பிவிட்டு கர்ப்பிணி தற்கொலை

தூக்கில் தொங்குவது போல் கணவருக்கு வாட்ஸ் அப்பில் புகைப்படம் அனுப்பிவிட்டு கர்ப்பிணி தற்கொலை
தூக்கில் தொங்குவது போல் கணவருக்கு வாட்ஸ் அப்பில் புகைப்படம் அனுப்பிவிட்டு கர்ப்பிணி தற்கொலை
Published on

கோவை

தூக்கில் தொங்குவது போல் கணவருக்கு புகைப்படம் அனுப்பி விட்டு கர்ப்பிணி தற்கொலை செய்து கொண்டார்.

இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-

கர்ப்பிணி

கோவை பீளமேடு சக்திநகர் முருகன்கோவில் வீதியை சேர்ந்தவர் சஞ்சய் அரவிந்த். ஜவுளி வர்த்தகர். இவருடைய மனைவி சிந்துஜா (வயது29). இவர்களுக்கு கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. 2 வயதில் மகன் உள்ளார்.

என்ஜினீயரான சிந்துஜா கடந்த 8 மாதங்களாக கோவையில் உள்ள ஐ.டி. நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார். சிந்துஜா, தற்போது 5 மாத கர்ப்பிணியாக இருந்தார்.

புகைப்படம்

சம்பவத்தன்று வீட்டின் ஒரு அறையில் சஞ்சய் அரவிந்த் தனது மகனுடன் இருந்தார். மற்றொரு அறையில் சிந்துஜா இருந்தார். அவர், மின் விசிறியில் சேலையை மாட்டி தூக்குப்போடுவது போல் தனது செல்போனில் புகைப்படம் எடுத்தார்.

பின்னர் அந்த புகைப்படத்தை தனது கணவரின் வாட்ஸ்-அப் எண்ணிற்கு அனுப்பினார். அந்த படத்தை பார்த்த சஞ்சய் அரவிந்த் அதிர்ச்சி அடைந்தார். உடனே அவர் தனது மனைவி சிந்துஜா இருந்த அறைக்கு சென்று கதவை தட்டினார். ஆனால் கதவு திறக்கப்பட வில்லை.

தூக்கில் தொங்கினார்

இதையடுத்து அவர், அந்த அறையின் கதவை உடைத்து உள்ளே சென்றார். அங்கு தூக்கில் தொங்கிக் கொண்டு இருந்த சிந்துஜாவை மீட்டு கீழே இறக்கி முதலுதவி செய்தார். பின்னர் சிந்துஜாவின் அம்மாவுக்கு செல்போனில் தகவல் தெரிவித்தார்.

இதையடுத்து அவர், அக்கம்பக்கத்தினரின் உதவியுடன் சிந்துஜாவை தனியார் மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அங்கு பரிசோத னை செய்த டாக்டர், சிந்துஜா ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தார். அதை கேட்டு அவர் கதறி அழுதார்.

ஆர்.டி.ஓ. விசாரணை

சிந்துஜா, குடும்ப பிரச்சினையால் தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது வேறு ஏதாவது காரணமா? என்பது தெரியவில்லை. இது குறித்த புகாரின் பேரில் சிங்காநல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

அவர்களுக்கு திருமணம் ஆகி 7 ஆண்டுகளுக்குள் ஆவதால் ஆர்.டி.ஓ. விசாரணை நடந்து வருகிறது. தூக்கில் தொங்குவது போல் கணவருக்கு புகைப்படம் அனுப்பி விட்டு கர்ப்பிணி தற்கொலை செய்தது சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com