காஞ்சீபுரத்தில் கர்ப்பிணி தூக்குப்போட்டு தற்கொலை; திருமணமான 5 மாதத்தில் பரிதாபம்

காஞ்சீபுரத்தில் கர்ப்பிணி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
காஞ்சீபுரத்தில் கர்ப்பிணி தூக்குப்போட்டு தற்கொலை; திருமணமான 5 மாதத்தில் பரிதாபம்
Published on

தற்கொலை

காஞ்சீபுரம் கலைஞர் சாலை அதியமான் நகரை சேர்ந்தவர் வெங்கடேசன் என்ற அன்பழகன். இவரது மனைவி சரண்யா (வயது 27), இவர்களுக்கு திருமணமாகி 5 மாதங்கள் ஆகிறது. சரண்யா 3 மாத கர்ப்பிணியாக இருந்தார். சரண்யாவுக்கும் அவரது கணவர் வெங்கடேசுக்கும் தகராறு இருந்தது.

நேற்று காலை தூக்கத்தில் இருந்து எழுந்த வெங்கடேசன் மனைவி சரண்யா தூக்கில் பிணமாக தொங்குவதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

இது குறித்து காஞ்சீபுரம் தாலுகா போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இன்ஸ்பெக்டர் ராஜகோபால் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சரண்யாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக காஞ்சீபுரம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

இது குறித்து காஞ்சீபுரம் வருவாய் ஆர்.டி.ஓ.வும் விசாரித்து வருகிறார்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com