300 படுக்கைகள் தயார்படுத்தும் பணி தீவிரம்

காரைக்குடியில் கொரோனா வார்டு அமைக்க 300 படுக்கைகள் தயார்படுத்தும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
300 படுக்கைகள் தயார்படுத்தும் பணி தீவிரம்
Published on

காரைக்குடி,

காரைக்குடி பழைய அரசு மருத்துவமனையில் உள்ள கொரோனா வார்டு முழுவதும் நோயாளிகள் சிகிச்சை பெற்று வருவதால் இடம் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. இதையடுத்து காரைக்குடி சூரக்குடி சாலையில் உள்ள புதிய அரசு தலைமை மருத்துவமனையில் புதிதாக கட்டப்பட்ட புறநோயாளிகள் பிரிவு கட்டிடத்தில் 300 படுக்கைகள் கொண்ட கொரோனா சிறப்பு வார்டு அமைக்கும் பணிகள் தற்போது தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதற்காக சென்னையில் இருந்து லாரி மூலம் 300 இரும்பு கட்டில்கள் காரைக்குடிக்கு கொண்டு வரப்பட்டு உள்ளது. அந்த கட்டில்களை 300 படுக்கைகளாக மாற்றும் பணியில் ஊழியர்கள் தீவிரமாக ஈடுபட்டு உள்ளனர். இன்னும் 2 நாட்களில் இந்த சிறப்பு வார்டு தயார் செய்யப்பட்டு கொரோனா சிகிச்சை மையமாக செயல்பட உள்ளது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com