தாய் இறந்த துக்கம் தாங்காமல் பேராசிரியர் விஷம் குடித்து தற்கொலை

தாய் இறந்த துக்கம் தாங்காமல் பேராசிரியர் விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்டார்.
தாய் இறந்த துக்கம் தாங்காமல் பேராசிரியர் விஷம் குடித்து தற்கொலை
Published on

பவானி,

பவானி அருகே உள்ள ஆர்.என்.புதூரை சேர்ந்தவர் தங்கராஜ் (வயது 60), இவருடைய மனைவி சந்திரா ( 52). இவர்களுடைய மகன் வினோத்குமார் (34), மகள் லோகவதி (38). வினோத்குமார் ஈரோடு அருகே உள்ள ஒரு தனியார் பார்மசி கல்லூரி ஒன்றில் பேராசிரியராக பணியாற்றி வந்தார். லோகவதி திருமணம் ஆகி கணவருடன் ஈரோடு ரங்கம்பாளையத்தில் வசித்து வந்தார். கடந்த சில நாட்களுக்கு முன்பு லோகவதியின் கணவர் உடல்நிலை பாதிக்கப்பட்டு இறந்து விட்டார்.

தாய் தற்கொலை

இதற்கிடையே வினோத்குமாருக்கும், பவானி லட்சுமி நகர் பகுதியைச் சேர்ந்த ஒரு பெண்ணுக்கும் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது சில மாதங்களிலேயே கருத்து வேறுபாடு ஏற்பட்டு அவர் கணவரை பிரிந்து சென்றுவிட்டார்.

மருமகன் இறந்துவிட்டதாலும், மருமகள் மகனை பிரிந்து சென்றுவிட்டதாலும் சந்திரா கடந்த சில நாட்களாக மனவேதனையில் இருந்து வந்தார். இதனால் வாழ்க்கையில் வெறுப்படைந்த அவர் கடந்த ஜனவரி மாதம் விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்டார்.

விஷம் குடித்தார்

இதனால் சொல்ல முடியாத துயரத்துக்கு வினோத்குமார் ஆளானார். நாள்தோறும் தாய நினைத்து கண்ணீர் விட்ட அவர் ஒரு கட்டத்தில் துக்கம் தாங்காமல் நேற்று மாலை விஷம் குடித்துவிட்டார்.

வீட்டில் மயங்கி கிடந்த அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக ஈரோடு அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றார்கள். அங்கு பரிசோதனை செய்த டாக்டர்கள் வினோத்குமார் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.

இதுகுறித்து சித்தோடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

X

Daily Thanthi
www.dailythanthi.com