டிரோன் பறக்க தடை

டிரோன் பறக்க தடை
டிரோன் பறக்க தடை
Published on

கோவை

கோவை மாநகர காவல்துறை சார்பில் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

கோவை மத்திய சிறை வளாகத்தில் சி.ஆர்.பி.எப். முகாம் உள்ளது. இந்த நிலையில் பாதுகாப்பு கருதி கோவை மத்திய சிறையை சுற்றி 2 கிலோ மீட்டர் தூரத்திற்கு டிரோன் பறக்க தடை விதிக்கப்பட்டு உள்ளது. இதை மீறுபவர்கள் மீது காவல்துறை சார்பில் சட்ட ரீதியாக கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

இதையொட்டி கோவையில் தடை செய்யப்பட்ட பகுதிகளில் டிரோன் பறக்க விடக்கூடாது என்று அதை வைத்திருப்பவர்களை அழைத்து ஆலோசனை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாநகர போலீஸ் கமிஷனர் பிரதீப் குமார் தெரிவித்தார்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com