குடிநீர் வழங்கக்கோரி காலி குடங்களுடன் பொதுமக்கள் மறியல்

குடிநீர் வழங்கக்கோரி காலி குடங்களுடன் பொதுமக்கள் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
குடிநீர் வழங்கக்கோரி காலி குடங்களுடன் பொதுமக்கள் மறியல்
Published on

காஞ்சீபுரம்,

காஞ்சீபுரம் காமாட்சியம்மன் கோவில் சன்னதி தெருவில், உள்ள 7-வது வார்டில் குடிநீர் தட்டுப்பாடு இருந்து வந்தது. பலமுறை நகராட்சிக்கு தகவல் தெரிவித்தும், அந்த பகுதிக்கு குடிநீர் வழங்கப்படவில்லை. இதனால் ஆத்திரம் அடைந்த பொதுமக்கள நேற்று காலிகுடங்களுடன் காமாட்சியம்மன் கோவில் சன்னதி தெருவில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அப்போது அவர்கள், தண்ணீர் வழங்கும் படி கோஷங்களை எழுப்பினார்கள்.

இது குறித்து தகவல் கிடைத்ததும், காஞ்சீபுரம் நகராட்சி ஆணையர் மகேந்திரன், பெரிய காஞ்சீபுரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ரஜினிகாந்த் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். சாலை மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி இப்போது உங்களுக்கு லாரி மூலம் உடனடியாக குடிநீர் வினியோகிக்கிறோம், விரைவில் உங்களுக்கு குழாய் மூலம் தண்ணீர் வினியோகிகக்கப்படும் என்று உறுதியளித்தனர்.

அதன் பேரில் சாலை மறியலில் ஈடுபட்ட பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். மறியல் காரணமாக அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com