பென்னாகரத்தில் திமுக சார்பில் பட்ஜெட் விளக்க பொதுக்கூட்டம்

பென்னாகரத்தில் தி.மு.க. சார்பில் பட்ஜெட் விளக்க பொதுக்கூட்டம் நடந்தது.
பென்னாகரத்தில் திமுக சார்பில் பட்ஜெட் விளக்க பொதுக்கூட்டம்
Published on

பென்னாகரம்:

தர்மபுரி மேற்கு மாவட்ட தி.மு.க. சார்பில் தமிழக அரசின் பட்ஜெட் விளக்க பொதுக்கூட்டம், உள்ளாட்சி தேர்தலில் வாக்களித்தவர்களுக்கு நன்றி தெரிவிக்கும் பொதுக்கூட்டம் பென்னாகரம் பழைய பஸ் நிலையத்தில் நடந்தது. மேற்கு மாவட்ட பொறுப்பாளர் இன்பசேகரன் தலைமை தாங்கினார். நகர செயலாளர் வீரமணி வரவேற்றார். மாநில வர்த்தகர் அணி துணை அமைப்பாளர் தர்மச்செல்வன், மாவட்ட பொறுப்புக்குழு உறுப்பினர்கள் காளியப்பன், துரைசாமி, ஒன்றிய செயலாளர்கள் செல்வராஜ், ஏரியூர் செல்வராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நிகழ்ச்சியில் தலைமை கழக பேச்சாளர்கள் இளங்கோ, வகிதா நூர்ஜஹான் பேகம் ஆகியோர் கலந்து கொண்டு பட்ஜெட்டில் இடம்பெற்றுள்ள பல்வேறு திட்டங்கள் குறித்து பேசினர். பேரூராட்சி தலைவர்கள் முரளி, மனோகரன், பிருந்தா நடராஜன், வெங்கடேசன், ஒன்றிய செயலாளர்கள் குட்டி, அன்பழகன், கோபால், குமரவேல், மாவட்ட பொறுப்புக்குழு உறுப்பினர் சூடப்பட்டி சுப்பிரமணி, பொதுக்குழு உறுப்பினர் சண்முகம், ஊராட்சி மன்றத்தலைவர் மாதம்மாள் கோவிந்தசாமி உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் பாப்பாரப்பட்டி பேரூர் கழக செயலாளர் சண்முகம் நன்றி கூறினார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com