சொத்து வரி உயர்வை கண்டித்து தர்மபுரியில் அமமுக கண்டன பொதுக்கூட்டம்

சொத்து வரி உயர்வை கண்டித்து தர்மபுரியில் அ.ம.மு.க. கண்டன பொதுக்கூட்டம் நடந்தது.
சொத்து வரி உயர்வை கண்டித்து தர்மபுரியில் அமமுக கண்டன பொதுக்கூட்டம்
Published on

தர்மபுரி,:

தர்மபுரி மாவட்ட அ.ம.மு.க. சார்பில் தமிழக அரசின் சொத்து வரி உயர்வை கண்டித்து தர்மபுரி குமாரசாமிப்பேட்டை வாரியார் திடலில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு நகர செயலாளர் பார்த்திபன் தலைமை தாங்கினார். நகர அவைத்தலைவர் பழனிசாமி வரவேற்று பேசினார். ஜெயலலிதா பேரவை மாநில துணைத்தலைவர் ஆர்.பாலு, மாவட்ட அவைத்தலைவர் முத்துசாமி, மாவட்ட துணை செயலாளர் ஏகநாதன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் கட்சியின் அமைப்பு செயலாளரும், தர்மபுரி மாவட்ட செயலாளருமான டி.கே.ராஜேந்திரன் கலந்து கொண்டு சொத்து வரி உயர்வை கண்டித்து பேசினார். கூட்டத்தில் ஒன்றிய செயலாளர்கள் பாஸ்கர், பெரியசாமி, சாம்ராஜ், கணேசன், பூங்காவனம், குமார், மாதேஷ், சார்பு அமைப்பு மாவட்ட செயலாளர்கள் வேலாயுதம், கோகுல், முருகேசன், வசந்தி, கிருஷ்ணன், மாது உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் நகர துணை செயலாளர் சீனிவாசன் நன்றி கூறினார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com