

மும்பை,
தானே மாவட்டம் பிவண்டி பகுதியில் 21 வயது பெண் ஒருவர் கணவருடன் வசித்து வருகிறார். இவருக்கு பெண் குழந்தை பிறந்து உள்ளது.
இதையடுத்து அவரது கணவர் மற்றும் குடும்பத்தினர் பெண்ணை கொடுமைப்படுத்தியதாக கூறப்படுகிறது. மேலும் அவர்கள் பெண் குழந்தையை வளர்க்க, மனைவியை அவரது பெற்றோரிடம் இருந்து மாதம் ரூ.30 ஆயிரம் வாங்கி தருமாறு வலியுறுத்தி உள்ளனர்.
இதுகுறித்து பாதிக்கப்பட்ட பெண், போலீசில் புகார் அளித்தார். பெண் குழந்தையை பெற்றெடுத்த மனைவியை கொடுமைப்படுத்தி, குழந்தையை வளர்க்க மாதம் ரூ.30 ஆயிரம் கேட்ட கணவர் தில்சாத் காபா மோமின், அவரது பெற்றோர் சோனு காபா மோமின், நவுசாத் மோமின் ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்து உள்ளனர். மேலும் புகார் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.