பள்ளிப்பட்டு அருகே ரியல் எஸ்டேட் தரகர் வீட்டில் நகை, பணம் திருட்டு

திருவள்ளூர் மாவட்டம் பள்ளிப்பட்டு அடுத்த வெளியகரம் கிராமத்தை சேர்ந்தவர் சுதர்சனன் (வயது 45).
பள்ளிப்பட்டு அருகே ரியல் எஸ்டேட் தரகர் வீட்டில் நகை, பணம் திருட்டு
Published on

திருவள்ளூர் மாவட்டம் பள்ளிப்பட்டு அடுத்த வெளியகரம் கிராமத்தை சேர்ந்தவர் சுதர்சனன் (வயது 45). ரியல் எஸ்டேட் தரகர். இவர் கடந்த 24-ந்தேதி வீட்டை பூட்டி கொண்டு தனது குடும்பத்தினருடன் பெங்களூருவில் உள்ள உறவினர் வீட்டு விசேஷத்திற்கு சென்றார்.

நேற்று மதியம் பெங்களூருவில் இருந்து வீடு திரும்பிய அவர் வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். வீட்டுக்குள் சென்று பார்த்தபோது பீரோ திறக்கப்பட்டு அதில் இருந்த பொருட்கள் கலைக்கப்பட்டு இருந்தன. அதில் இருந்த 7 பவுன் தங்கநகை, ஒரு கிலோ வெள்ளி பொருட்கள், ரூ.70 ஆயிரம் போன்றவை திருடப்பட்டிருப்பது தெரியவந்தது.

இதுகுறித்து சுதர்சனன் பள்ளிப்பட்டு போலீசில் புகார் செய்தார். கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு வீட்டில் பதிவாகி இருந்த கைரேகைகளை பதிவு செய்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com