ஆவடி அருகே கிருஷ்ணா கால்வாயில் கட்டிடத்தொழிலாளி பிணமாக மீட்பு

ஆவடி அருகே கிருஷ்ணா கால்வாயில் கட்டிடத்தொழிலாளி பிணமாக மீட்பு.
ஆவடி அருகே கிருஷ்ணா கால்வாயில் கட்டிடத்தொழிலாளி பிணமாக மீட்பு
Published on

ஆவடி,

ஆவடியை அடுத்த மோரை அண்ணா நகர் அருகே உள்ள கிருஷ்ணா கால்வாயில் நேற்று காலை ஆண் உடல் மிதப்பதாக ஆவடி டேங்க் பேக்டரி போலீசாருக்கு தகவல் வந்தது. சம்பவ இடத்துக்கு சென்ற போலீசார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக சென்னை கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவைத்தனர். மேலும் இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர். அதில் பிணமாக மீட்கப்பட்டவர், திருவள்ளூர் மாவட்டம் வேப்பம்பட்டு அடுத்த அயத்தூர் பகுதியை சேர்ந்த கட்டிடத்தொழிலாளி வெங்கடேசன் (வயது 46). என்பது தெரியவந்தது.

நேற்று முன்தினம் இரவு வேப்பம்பட்டு அருகே உள்ள தொட்டிக்கலை பகுதியில் கிருஷ்ணா கால்வாயில் குளித்த வெங்கடேசன், கால்வாயில் அதிகளவில் தண்ணீர் சென்று கொண்டிருந்ததால் தண்ணீரில் அடித்து வரப்பட்டதும், இதில் நீரில் மூழ்கிய அவர் பலியானதும் தெரிந்தது. இறந்த வெங்கடேசனுக்கு மனைவி மற்றும் 2 மகள்கள் உள்ளனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com