அரசம்பட்டு அரசு பள்ளியில் வட்டார கல்வி அலுவலர் ஆய்வு

அரசம்பட்டு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் வட்டார கல்வி அலுவலர் ஆறுமுகம் ஆய்வு செய்தா.
அரசம்பட்டு அரசு பள்ளியில் வட்டார கல்வி அலுவலர் ஆய்வு
Published on

சேத்துப்பட்டு

திருவண்ணாமலை மாவட்டம் சேத்துப்பட்டு அருகே உள்ள அரசம்பட்டு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் பெரணமல்லூர் வட்டார கல்வி அலுவலர் ஆறுமுகம் திடீரென ஆய்வு செய்தார்.

அப்போது மாணவ-மாணவிகளுக்கு வழங்கிய சத்துணவை சாப்பிட்டு பார்த்தார். தினமும் என்னென்ன உணவுகள் வழங்கப்படுகிறது, தினமும் முட்டை வழங்கப்படுகிறதா என கேட்டறிந்தார்.

அப்போது ஊராட்சி மன்ற தலைவர் உஷாராணி வடிவேல், தலைமை ஆசிரியர் சீனிவாசன், ஆசிரியர்கள் அரங்கநாதன், அய்யாதுரை ஆகியோர் உடனிருந்தனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com