

அருப்புக்கோட்டை,
அருப்புக்கோட்டை தாசில்தாராக பணிபுரிந்து வந்த ரவிச்சந்திரன் பதவி உயர்வு பெற்று சென்னைக்கு மாறுதல் பெற்றார். இதனையடுத்து அருப்புக்கோட்டை வருவாய் தனி தாசில்தாராக பணிபுரிந்து வந்த அறிவழகன் என்பவரை தாசில்தாரராக நியமனம் செய்து மாவட்ட கலெக்டர் மேகநாத ரெட்டி உத்தரவிட்டிருந்தார். இந்நிலையில் புதிய தாசில்தாராக அறிவழகன் பொறுப்பேற்றுக்கொண்டார்.